Secretary Desk


அன்புள்ள நண்பர்களே!

வணக்கம். வரி ஆலோசகர் சங்கத்திலிருந்து உங்கள் அனைவருக்கும் எங்கள் வாழ்த்துக்கள். இச்சங்கத்தின் செயலாளர் பொறுப்புக்கு என்னைத் தேர்ந்தெடுத்த நிர்வாக குழுவுக்கு என் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

வரி ஆலோசகர்களுக்கும் மற்றும் வரி பற்றிய அறிவைத் தேடுபவர்களுக்கும் பயனுள்ளாதாக இச்சங்கம் இருக்கும். இச்சங்கத்தினால் உங்களுக்கு ஏற்படும் பயன்கள் சிலவற்றை உங்கள் கவனத்திற்கு கொண்டுவருகிறேன்.

அறிவு பகிர்வு:

இச்சங்கத்தின் முக்கிய நோக்கமே வரி பற்றிய அறிவை பகிர்தல் ஆகும். வரி பற்றிய தகவல்களை உடனுக்குடன் நமது உறுப்பினர்களுக்கு கொண்டுச் செல்லுதல். மற்றும் வரி பற்றிய விவாதங்களை உறுப்பினர்களுக்கிடையில் ஏற்படுத்துதல்.

உறுப்பினர்களிடையே இணைப்பு:

நமது உறுப்பினர்கள் மற்றும் வரி வல்லுனர்களிடையே ஓர் இணைப்பை ஏற்படுத்தி அவர்களுடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்துதல்.

எண்ணங்களை பரிமாறுதல்:

நமது உறுப்பினர்களுக்கிடையே தங்கள் எண்ணங்களைப் பரிமாறிக் கொள்ள ஒரு தளமாக இச்சங்கம் செயல்படும்.

கருத்தரங்குகள்:

வரி மற்றும் வரி சார்ந்த தலைப்புகளில் இச்சங்கம் தமிழகமெங்கும் வட்ட அளவில் கருத்தரங்குக்களை ஏற்பாடு செய்யும். தேவைக்கேற்ப வலைதள கருத்தரங்குகள், பயிலரங்குகள் மற்றும் மாநாடுகளை நடத்தும்.

கூட்டு பிரதிநிதித்துவம்:

உறுப்பினர்கள் நலனுக்காகவும் மற்றும் பொது நலனுக்காகவும் தேவையான கூட்டு பிரதிநிதித்துவத்தை இச்சங்கம் ஏற்படுத்தும்.

உறுப்பினர்கள் சலுகைத் திட்டம்:

மற்ற நிறுவனங்களுடன் இணைந்து தேவைக்கேற்ப உறுப்பினர்கள் சலுகைத் திட்டத்தை இச்சங்கம் ஏற்படுத்தும்.

குழுக்காப்பீடு:

உறுப்பினர்கள் நலனுக்காக உறுப்பினர்கள் குழுக்காப்பீடு இச்சங்கத்தால் ஏற்படுத்தபடும்.

உறுப்பினர்களிடையே வரி அறிவை பெறுவதில் மொழி ஒரு தடையாக இருக்கூடாது என்பதில் கவனமாக உள்ளோம். தாய்மொழியில் கற்பதன் மூலமே ஒருவர் புரிதலோடு எதையும் கற்க முடியும். அதற்காக, இச்சங்கம் வரி பற்றிய விளக்கங்களை தமிழிலும் வழங்கும். மேலும் அனைத்து வகையான கருத்தரங்கிலும் தமிழில் விளக்கங்கள் இருக்கும்.

ஒன்று பட்டால் உண்டு வாழ்வு” “கூடி வாழ்ந்தால் கோடி நன்மை” என்ற முதுமொழிகளுக்கு ஏற்ப நமது உறுப்பினர்கள் மதம், இனம், மொழி மற்றும் சாதி போன்ற வேறுபாடுகள் அனைத்தையும் கடந்து “ நாம் அனைவரும் ஒரே இனம்” என்ற ஒற்றுமை உணர்வைக் கொண்டுருப்போம். இங்கு அரசியலுக்கு இடமில்லை: அறிவுக்கு மட்டுமே இடமுண்டு.

ஆகவே, இச்சங்கத்தில் புதிதாக இணையும் உறுப்பினர்கள் அனைவரும் புதிதாக உறுப்பினர்களை தேட வேண்டும். உங்களுக்கு ஒரு நண்பர் இருந்தால் அல்லது சேர ஆர்வமுள்ள ஒருவரை சந்தித்தால் தயவு செய்து அவர்களை இச்சங்கத்திற்கு அழைக்கவும். இது நமது வலிமையை சேர்ப்பதோடு நமது இலக்குகளை எளிதாக அடையவும் உதவும்.

நாம் செய்யும் அனைத்து செயல்களிலும் நிபுணத்துவம் பெற்றவர்களாக விளங்குவோம். நமது வரி ஆலோசகர்கள் சமுதாயத்தை சிறப்புடையாகவம் மற்றும் பொறுப்புடையதாகவும் மாற்ற நாம் அனைவரும் இணைந்து செயல்படுவோம்.

தடையற்ற தொடர்பு மற்றும் கருத்துப் பரிமாற்றத்தை உறுதிபடுத்த இவ்வலைதளமான www.variaalosagargal.org உறுவாக்கியுள்ளோம். தயவு செய்து இவ்வலைதளத்தை பார்வையிட்டு உங்கள் ஆலோசனைகளை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

எதிர்காலத்தில் நமது அமைப்பு தமிழ் நாட்டில் மட்டுமின்றி இந்தியா முழுவதிற்கும் ஒரு சிறந்த சங்கமாக மாற்ற நாம் அனைவரும் ஒருகிணைந்து செயல்படுவோம்.

ஜெய்ஹிந்த்!!!
ஜெயகுமார் கச்சபேஸ்வரன்
செயலாளர்
வரி ஆலோசகர்கள் சங்கம்.

Dear Colleagues!

Greetings from the Vari Aalosagargal Sangam!!!

I express my gratitude to the Executive Committee who elected me for the responsibility of the Secretary of this Society.

This Sangam will be useful for tax advisors and for those seeking tax knowledge. I bring to your attention some of the benefits for members of the Association.

Knowledge sharing:

The main purpose of this Association is to share tax knowledge. Transmit tax information to our members promptly and to arrange discussions in regard to tax related subjects among members.

Networking:

Establish a networking between our members and tax experts and create harmony among them.

Exchange of Ideas:

This will serve as a platform for our members to exchange their thoughts.

Workshops/Seminars/Conference:

The organization will organize workshops/seminars/group discussions on tax and tax issues across Tamil Nadu.

Collective Representation:

This will create the necessary collective representation for the benefit of members and the public interest.

Membership discount Plan:

This Sangam coordinating with other firms, members discount plan will arrange for the benefit of members.

Group insurance:

For the benefit of the members, members group's insurance will arrange by this Sangam.

We are careful that language should not be a barrier to tax knowledge among members. One can learn anything with understanding only by teaching it in the mother tongue. For this purpose, the Sangam will also provide a description of the tax in Tamil and all kinds of seminars have presentations in Tamil.

In accordance with the saying "ஒன்று பட்டால் உண்டு வாழ்வு" and "கூடி வாழ்ந்தால் கோடி நன்மை", our members transcend differences in religion, ethnicity, language and caste to create a unity of "we are all one ethnicity". There is no room for politics here: there is only room for knowledge.

Therefore, all new members who join the party must seek new members. If you have a friend or an interested person to join, please invite them for this Association. This will add to our strength and help us reach our goals easily.

We specialize in everything we do. We will all work together to make our tax advisers community special and responsible.

We have respected this site www.variaalosagargal.org to ensure seamless communication and exchange of ideas. Please visit this site and share your suggestions with us.

In the future, we will all work together to make our organization a better association not only in Tamil Nadu, but throughout India.

Jai Hind!!!
Jayakumar Kachapeshwaran
Secretary
Vari Aalosagargal Sangam.